என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "மத்திய அரசு ஊழியர்கள்"
ஊழல் புகாரில் சிக்கிய ஒரு ஐ.ஏ.எஸ். அதிகாரி உள்பட மத்திய அரசு ஊழியர்கள் 79 பேர் மீது வழக்கு தொடர அனுமதி கேட்டு மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையம் காத்திருக்கிறது. ஆனால், 4 மாதங்களுக்கு மேல் ஆகியும், சம்பந்தப்பட்ட அரசு துறைகள் அனுமதி அளிக்காமல் இழுத்தடித்து வருகின்றன.
இந்த ஊழியர்கள் மீது மொத்தம் 41 வழக்குகள் தொடரப்பட உள்ளன. இவற்றில் அதிகபட்சமாக 9 வழக்குகள், மத்திய பணியாளர் நலத்துறை அமைச்சகத்தின் ஒப்புதலுக்காக காத்திருக்கின்றன.
உத்தரபிரதேச அரசின் அனுமதிக்காக 8 வழக்குகளும், பாரத ஸ்டேட் வங்கி, கனரா வங்கி, கார்ப்பரேஷன் வங்கி, ஐ.டி.பி.ஐ. வங்கி ஆகியவற்றின் அனுமதிக்காக 4 வழக்குகளும், யூனியன் பிரதேச அரசுகளின் அனுமதிக்காக 3 வழக்குகளும் காத்திருக்கின்றன.
வழக்கு தொடர விரைந்து அனுமதி வழங்குமாறு நினைவுபடுத்தி இருப்பதாக ஊழல் கண்காணிப்பு ஆணைய அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
ஈரோடு காந்தி ஜி ரோட்டில் உள்ள பி.எஸ்.என்.எல். அலுவலகம் மற்றும் தலைமை தபால் நிலையம் இன்றி வெறிச்சோடி கிடந்தது. ஊழியர்கள் பணிக்கு வராமல் இன்று 2-வது நாளாக புறக்கணித்தனர். அதே சமயம் அதிகாரிகள் வந்திருந்தனர். இதே போல் ஈரோடு பிரப் ரோட்டில் உள்ள பி.எஸ்.என்.எல். பொது மேலாளர் அலுவலகத்துக்கும் ஊழியர்கள் யாரும் பணிக்கு வரவில்லை.
இதே போல் கனரா வங்கி, ஸ்டேட் வங்கி, இந்தியன் வங்கி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி உள்பட தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளும் இன்று செயல்படவில்லை.
ஊழியர்கள் வருகை இல்லாததால் பாங்கிகள் வெறிச்சோடி கிடந்தன.
இன்று 2-வது நாளாக பாங்கிகள் செயல்படாததால் நேற்று இன்றும் ரூ.600 கோடிக்கு பண பரிவர்த்தனை முடங்கியது. இதனால் வாடிக்கையாளர்கள் மிகவும் அவதிப்பட்டனர்.
ஈரோடு மாவட்டத்தில் பாங்கி ஊழியர்கள் 650 பேரும் பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் 520 பேரும் தபால் அலுவலக ஊழியர்கள் 600 பேரும் இந்த வேலை நிறுத்த போராட்டத்தில் குதித்து உள்ளனர். #tamilnews
வேலைவாய்ப்புகளை உருவாக்க வேண்டும். பொதுத்துறைகளில் தனியார்மயத்தையும், அன்னிய நேரடி முதலீட்டையும் அனுமதிக்க கூடாது. குறைந்தபட்ச கூலியாக மாதம் ரூ.18 ஆயிரம் நிர்ணயம் செய்ய வேண்டும்.
மத்திய, மாநில அரசுகள் பொதுத்துறைகளின் பங்குகளை விற்பனை செய்வதை கைவிட வேண்டும். தொழிலாளர்களுக்கு சமூக பாதுகாப்பு அளிக்க வேண்டும் உள்ளிட்ட 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு முழுவதும் மத்திய அரசு ஊழியர்கள், வங்கி ஊழியர்கள் 2 நாள் வேலைநிறுத்தத்தை நேற்று தொடங்கினர். இதனால் மத்திய அரசு அலுவலகங்கள் மற்றும் வங்கிகள் வெறிச்சோடி காணப்பட்டன.
சென்னை அண்ணாசாலையில் உள்ள யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் அலுவலகம் முன்பு மத்திய அரசு ஊழியர்கள், வங்கி மற்றும் காப்பீட்டு துறை ஊழியர்கள் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அகில இந்திய வங்கி ஊழியர்கள் சங்க பொதுச்செயலாளர் வெங்கடாசலம் ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்தார். மத்திய அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பப்பட்டன.
பின்னர் அவர் கூறியதாவது:-
பெரும்பாலான மக்களை சார்ந்து அரசு செயல்பட வேண்டும். ஆனால் முதலாளிகளுக்கு சாதகமான திட்டங்கள் கொண்டு வரப்படுகிறது. இந்திய மக்கள் தொகையில் ஒரு சதவீதம் பேர் மட்டுமே இந்திய வருமானத்தில் 73 சதவீதம் மூலதனம் மூலம் பயனடைந்து வருகின்றனர். இதனால் ஏழை, பணக்காரர்கள் வித்தியாசம் அதிகரித்து வருகிறது. 50 கோடி தொழிலாளர்கள் நலனுக்கு எதிரான திட்டங்கள் கொண்டு வரப்படுகிறது.
அனைவருக்கும் ஓய்வூதியம், பெண் தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு, பொதுத்துறையை வளர்ப்பது போன்ற செயல்களை விடுத்து, மத்திய அரசு முதலாளிகளுக்கு சாதகமான திட்டங்களை அறிவித்து உள்ளது. இந்த கொள்கைகளை கைவிட வலியுறுத்தி நாடு முழுவதும் 20 கோடி தொழிலாளர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு உள்ளனர்.
45 ஆயிரம் வங்கி கிளை ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு உள்ளதால் பண பரிமாற்றம், காசோலை பரிமாற்றம், அரசு கருவூல கணக்குகள் செயல்பாடு, ஏற்றுமதி, இறக்குமதி கணக்குகள் போன்ற வங்கி சேவைகள் பாதிக்கப்பட்டு உள்ளன. இதன் மூலம் நாடு முழுவதும் ரூ.20 ஆயிரம் கோடி மதிப்பில் காசோலைகள் முடங்கி கிடக்கிறது. தமிழகத்தில் ரூ.6 ஆயிரம் கோடி மதிப்பிலான காசோலைகள் பரிமாற்றம் ஆகவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
ஆர்ப்பாட்டத்தில் இந்திய வங்கி ஊழியர்கள் சம்மேளன பொதுசெயலாளர் சி.பி.கிருஷ்ணன், இன்சூரன்ஸ் ஊழியர்கள் சங்க பொதுசெயலாளர் கோவிந்தன் உள்பட பலர் கலந்து கொண்டனர். இந்த வேலைநிறுத்தம் இன்றும் (புதன்கிழமை) தொடர்கிறது.
நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் மற்றும் மத்திய அரசு ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டாலும், ஸ்டேட் வங்கி மற்றும் தனியார் வங்கிகள் உள்ளிட்டவை வேலைநிறுத்தத்தில் பங்கேற்காமல் வழக்கம் போல் செயல்பட்டன.
விலைவாசி உயர்ந்துவிட்டதால் மத்திய அரசு ஊழியர்களுக்கும் பென்சன்தாரர்களுக்கும் அகவிலைப்படி 2 சதவீதம் உயர்த்திக் கொடுக்க முடிவு செய்யப்பட்டதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்த்தப்பட்டுள்ளதால் மத்திய அரசுக்கு ஒரு வருடத்திற்கு 6112 கோடி ரூபாய் கூடுதல் செலவு ஏற்படும். பென்சன்தாரர்களுக்கு அகவிலைப்படி உயர்த்தி கொடுப்பதால் வருடத்திற்கு 4074 கோடி கூடுதல் செலவு ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. #DAHike #UnionCabinet
மத்திய அரசு ஊழியர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மற்றும் ஜூலை மாதத்தில் அகவிலைப்படி உயர்த்தப்படுவது வழக்கம். விலைவாசி உயர்வின் அடிப்படையில் இந்த அகவிலைப்படி உயர்த்தப்பட்டு வருகிறது.
இந்த ஆண்டு ஜூலை மாதத்திற்கான அகவிலைப் படியை 2 சதவீதம் உயர்த்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதற்கான அறிவிப்பு இம்மாதம் இறுதிக்குள் வெளியாக உள்ளது.
மத்திய அரசு ஊழியர்கள் ஏற்கனவே 7 சதவீதம் அகவிலைப்படி பெற்று வருகின்றனர். இது 9 சதவீதமாக உயர்த்தப்படுகிறது. ஜூலை 1-ந் தேதியை கணக்கிட்டு இந்த அகவிலைப்படி வழங்கப்படுகிறது. இதன்மூலம் 40 லட்சம் மத்திய அரசு ஊழியர்களும், 50 லட்சம் பென்சன்தாரர்களும் பயன் பெறுவார்கள்.
புதுடெல்லி:
தனியார் நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்கள் ஆண்டுக்கு ஒரு முறை வெளி நாடுகளுக்கு சுற்றுலா செல்லும் வகையில் அவர்களுக்கு விடுமுறை பயண சலுகைகள் வழங்கப்படுகின்றன.
மத்திய அரசு ஊழியர்களுக்கும் அத்தகைய சலுகைகள் இருந்தாலும் அவை உள்நாட்டு அளவில் மட்டுமே இருந்து வருகிறது.
இந்த நிலையில் அதை விரிவுப்படுத்த அரசு திட்டமிட்டது. அதன்படி இலங்கை, பூடான், வங்காளதேசம், ஆப்கானிஸ்தான், மாலத்தீவு, பாகிஸ்தான் ஆகிய சார்க் நாடுகளுக்கு செல்லும் வகையிலான திட்டத்தை வரையறுக்க முடிவு செய்யப்பட்டது. ஆனால் அதில் சில நடைமுறை சிக்கல்கள் இருந்ததால் அந்த திட்டம் கைவிடப்பட்டது.
இதற்கிடையே விடுமுறை பயணசலுகை திட்டத்தின் கீழ் மத்திய அரசு ஊழியர்கள் மத்திய ஆசிய நாடுகளுக்கு பயணம் செய்ய வாய்ப்பு உள்ளது. இதற்கான செயல் திட்டம் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.
இது தொடர்பாக மத்திய பணியாளர் நலத்துறை அமைச்சகம், சம்பந்தப்பட்ட பிற அமைச்சகங்களுடன் கருத்து கேட்டறிந்து வருகிறது. அதில் கருத்தொற்றுமை ஏற்படும் பட்சத்தில் கஜகஸ்தான், உஸ்பெகிஸ்தான், தஜிகிஸ்தான், கிஸ்கிஸ்தான், துர்க் மெனிக்ஸ்தான் உள்ளிட்ட நாடுகளுக்கு மத்திய அரசு ஊழியர்கள் பயணம் செய்யலாம்.
அதற்காக ஊதியத்துடன் கூடிய விடுப்பு மற்றும் பயண செலவு ஆகியவை அரசு சார்பில் வழங்கப்படும். #CentralGovernment #CentralGovernmentworker
7-வது சம்பள கமிஷனில் இந்த கூடுதல் பணிப்படியை ரத்து செய்துவிடலாம் என பரிந்துரை செய்யப்பட்டிருந்தது. அதை இப்போது மத்திய பணியாளர் துறை ஏற்றுக் கொண்டுள்ளது.
இதன்படி இனி மத்திய அரசு ஊழியர்கள் கூடுதல் பணி செய்தால் அதற்கான படி வழங்கப்படாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவு அனைத்து துறைகளுக்கும் பிறப்பிக்கப்பட்டிருக்கிறது.
அதே நேரத்தில் ஆபரேஷனல் பணி என அழைக்கப்படும் மின்துறை, எலக்ட்ரானிக்துறை போன்ற பணிகளில் ஈடுபடுபவர்களுக்கு கூடுதல் பணிப்படி வழங்கலாம் என்றும் பரிந்துரை செய்யப்பட்டிருக்கிறது. ஆனால் ஒவ்வொரு துறைகளிலும் இந்த பணிகளில் எந்தெந்த ஊழியர்கள் ஈடுபட்டிருக்கிறார்கள் என்ற பட்டியலை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் கூறியுள்ளனர்.
கூடுதல் பணிப்படி வழங்குவதில் பல்வேறு முறைகேடுகள் நடந்ததாகவும், எனவே தான் இந்த படி நிறுத்தப்படுவதாகவும் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இப்போது மத்திய அரசு ஊழியர்களுக்கு பயோமெட்ரிக் வருகை பதிவேடு நடைமுறைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. எனவே ஒரு ஊழியர் எத்தனை மணிக்கு அலுவலகத்திற்கு வருகிறார். எத்தனை மணிக்கு பணி முடிந்து செல்கிறார் என்பது அதில் பதிவாகி இருக்கும். எனவே ஊழியர்கள் கூடுதல் பணி நேரம் செய்கிறாரா? என்பதை இதை வைத்தே கண்டுபிடித்து விடலாம் என்று அந்த அதிகாரி கூறினார்.
ஒரு வேளை கூடுதல் பணி செய்ய வேண்டியது இருந்தால் அதற்கு எழுத்து பூர்வமாக அனுமதி பெற்று ஊழியரை அந்த பணியில் ஈடுபடுத்தலாம், அதற்கும் உரிய ஊக்க பணத்தை பெற்றுக் கொள்ளலாம் என்றும் புதிய நடைமுறையில் கூறப்பட்டுள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்